2004 - ல் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால். கடந்த 10 வருடங்களில் நடித்த படங்களின் எண்ணிக்கை என்னவோ குறைவுதான்! 10 வருடங்களில், கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்திருக்கிறார் விஷால். பட எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் விஷால் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றிருக்கிறார். தன்னுடைய பட விழாக்கள் மற்றும் பிரஸ்மீட்களில் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து கௌரவப்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருகக்கிறார் விஷால். அதுமட்டுமல்ல, தன்னுடைய ரசிகர்களுக்கு மதிப்பளித்து, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை சந்தித்துப்பேசுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். சுருக்கமாகச் சொல்வது என்றால் ரசிகர்களை அடிக்கடி மகிழும் நடிகர்களில் விஷாலும் ஒருவர்!
விஷால் நடிக்க வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி விஷால் நாளை அதாவது 05-04-2015 அன்று, தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ரசிகர்களை சென்னைக்கு வரவைத்து சந்தித்து உரையாட உள்ளார். இந்த சந்திப்புக்கான அழைப்பிதழ் மற்றும் அறிவிப்பில் விஷாலின் பெயருக்கு முன்னால் புரட்சித்தளபதி என்ற பட்டம் இடம்பெற்றிருக்கிறது. கடந்த சில வருடங்களாக புரட்சித்தளபதி பட்டத்தை துறந்திருந்த விஷால், ரசிர்களின் விருப்பத்துக்காகவே மீண்டும் அந்தப்பட்டத்தை தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளது சம்மதித்துள்ளாராம்.
0 comments:
Post a Comment