Picasso, Chagall, மற்றும் Camille Pissarro ஆகியவர்கள் வரைந்த ஓவியங்கள் மற்றும் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட புராதன பொருட்கள் என 1000க்கும் மேற்பட்டவைகளை Cornelius Gurlitt என்பவர் தனது முனிச்(Munich) வீட்டில் பாதுகாத்து வைத்திருந்தார்.
1900 ஆண்டுகளில் எண்ணெய்யை பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்களை 1930 மற்றும் 1940 களில் ஹிட்லரின் கீழ் நாசிசவாதியாக இருந்த Cornelius-ன் தந்தையான Hildebrand Gurlitt ஹிட்லரின் உத்தரவின் பேரில் கொள்ளையடித்து சென்றனர்.
இவற்றில் சில ஓவியங்கள் ஆஸ்திரியாவில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. ஜேர்மனி அரசால் நிர்ணயிக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு ஒன்று கொள்ளையடிக்கப்பட்ட சுவிஸ் ஓவியங்கள் குறித்து விசாரணை செய்து வருகிறது.
இது குறித்து பேசிய ஜேர்மனியின் கலாசார துறை அமைச்சரான Monika Grütters, ஹிட்லரின் நாசிசவாதிகளால் சுவிஸ் ஓவியங்கள் கொள்ளையடிக்கப்பட்டது நிச்சயம் தான் என்றும் அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட ஓவியங்களை அவற்றின் உரிமையாளரிடம் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
பெர்னில்(Bern) உள்ள The Museum of Fine Arts அருங்காட்சியகத்திற்கு தகவல் அனுப்பியுள்ள ஜேர்மனியின் கலாசார அமைச்சகம், சுவிஸிலிருந்து நாசிசவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட ஓவியங்கள் மற்றும் புராதன பொருட்களை விரைவில் திருப்பி அளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment