புதுமுக நடிகைகள் யாரைக் கேட்டாலும் சட்டென்று சொல்வார்கள் அஜீத் உடன் நடிக்கவேண்டும் என்று. இதேபோல கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கேவின் கையில் படங்கள் வரிசை கட்டி நின்றாலும் அம்மணிக்கு அஜீத் கூட ஒரு படத்திலாவது டூயட் பாடவேண்டும் என்பதுதான் ஒரே ஆசையாக இருக்கிறதாம். இதற்காகவே நடிக்கும் படங்களில் ஹிட் கொடுக்கவேண்டும் என்று கர்ம சிரத்தையோடு நடித்து வருகிறார். ‘யுத்தம் செய்' படத்தில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. மேகாவில் கண்ணம் குழிய குழிய சிரித்து அனைவரையும் மயக்கியவர். டார்லிங், எனக்குள் ஒருவன் படத்திலும் நடித்து ரசிகர்களின் மனங்களில் பச்சக் என்று ஒட்டிக்கொண்டார்.
தற்போது ‘அச்சமின்றி', ‘கத்துக்குட்டி', ‘வருஷநாடு', மா.கா.பா ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் படம் தவிர தெலுங்கில் ஒரு படமும் நடித்து வருவதால் உற்சாகமாக இருக்கிறார் சிருஷ்டி.
இந்த நிலையில்தான் சிருஷ்டி எப்போதோ கவர்ச்சியாக நடித்த படத்தை வெளியிட உள்ளனர். இதுவே அம்மணியை கதிகலங்கச் செய்துள்ளது எங்கே கவர்ச்சி நாயகி என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்றும் பதறினாலும் வருவது வரட்டும் என்றும் கொஞ்சம் தைரியமாகவே இருக்கிறார். ‘‘கண்டிப்பா. ‘டார்லிங்', ‘எனக்குள் ஒருவன்' ரெண்டு படம் ரிலீஸ் ஆகிடுச்சு. நாலு தமிழ் படத்துல நடிச்சு முடிச்சிட்டேன். ரெண்டு படத்துல நடிச்சுட்டு இருக்கேன். என்னுடைய கடின முயற்சியினால மட்டுமில்ல, தமிழ் ரசிகர்களோட ஆதரவினால கிடைச்ச பரிசு இது. இத்தனை பேர் என்னை ரசிக்கிறாங்களானு எனக்கே ஆச்சரியமா இருக்கு."
ஆறு வருஷம் முன்னாடி நடிச்ச படம். இப்போ ஏன் அதை தூசு தட்டி வெளியிடுகிறார்களோ? இதனால் தனக்கு கிடைக்கிற நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் போகாது என்பது அம்மணியின் ஸ்டேட்மென்ட்.
சிறிய நடிகர்கள், பெரிய நடிகர்கள் என்றெல்லாம் இல்லை. கிடைக்கும் எந்த வாய்ப்பையும் மிஸ் பண்ண மாட்டேன் என்று கூறும் சிருஷ்டிக்கு அஜித் உடன் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்று ஆசையாம். ஆனால் அது எப்போது நடக்குமே தெரியலையே என்கிறார்.
கன்னம் குழிய சிரித்தாலும் இதுவரை காதலில் விழுந்ததில்லையாம். ஐ லவ் யூ என்று யாருமே சொன்னதில்லை சத்தியமாக நம்புங்கள் என்கிறார் சிருஷ்டி... சரி சரி நாங்களும் நம்பிட்டோம்...
0 comments:
Post a Comment