இது குறித்து அவர் கூறும்போது ‘‘நான் அந்த வீடியோவை இன்னும் பார்க்கவில்லை. ஆனால் பெண்களுக்கு எந்த வகையிலான அதிகாரம் வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
பெண்கள் எப்போதும் தாங்கள் நினைத்த உடையை அணிய முடியாது. நினைத்தபடி செக்ஸ் வைத்துக் கொள்ளவும் முடியாது. நினைத்தபடி செக்ஸ் வைத்துக் கொள்வதும், திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்வதும் பெண்களின் முன்னேற்றத்துக்கானது என்று சொல்வதையும் ஏற்க முடியாது.
இவையெல்லாம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை, வலிமை போன்ற விஷயங்களை கொடுக்காது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் நிறைய பெண்கள் இருக்கிறார்கள். அந்த பெண்களை மேலே கொண்டு வருவதுதான் சுதந்திரம். அந்த சுதந்திரம் அதிகமான பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை’’ என்றார்.
0 comments:
Post a Comment