ரெட் ஜெயண்ட் மூவிஸ் பட நிறுவனத்தின் மூலம் ‘நண்பேண்டா’ என்ற படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாக நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
ஏப்ரல் 2 அன்று வெளியான இந்த படத்துக்கு கேளிக்கை வரிச்சலுகை கேட்டு, தமிழக அரசிடம் உதயநிதி ஸ்டாலின் விண்ணப்பம் செய்தார். வழக்கம்போல், அவரது படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்து விட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
‘தமிழில் தலைப்பு வைத்துள்ள, தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படங்களுக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளிக்கிறது.
நண்பேண்டா படத்துக்கு வரிவிலக்கு கேட்டு கடந்த மார்ச் 20–ந்தேதி விண்ணப்பம் செய்தோம். இதையடுத்து எங்களது படத்தை பார்த்த நிபுணர் குழு, நண்பேண்டா படத்தில் ஆபாசம் , வன்முறை காட்சிகள் இருப்பதாகவும், ஆங்கில சொற்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி வரி விலக்கு அளிக்க மறுத்து விட்டது.
இந்த படத்துக்கு சென்சார் போர்டு அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய படம் என்ற முறையில் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை கருத்தில் கொள்ள அந்த நிபுணர் குழு தவறிவிட்டது. எனவே, எங்களது படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்த நிதிமன்றம் அட்வகேட் கமிஷனர் மூலம் படத்தை பார்த்து முடிவு செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
உதயநிதி சார்பில் மூத்த வக்கீல் பி. வில்சன் ஆஜராகி வாதிட்டார்.
உதயநிதிக்கு ஆதரவாக அவர் குறிப்பிட்ட விஷயங்கள்தான் தற்போது படத்துறையில் சர்ச்சையாகி உள்ளது.
‘நண்பேண்டா படத்தை இந்த நீதிமன்றமோ அல்லது இந்த நீதிமன்றம் அமைக்கும் வக்கீல் கமிஷனரோ பார்த்து விட்டு, இந்த படம் கேளிக்கை வரி விலக்கு பெற தகுதியுள்ளதா? என்பதை முடிவு செய்யலாம்.
தமிழக அரசு உள் நோக்கத்துடன் மனுதாரரின் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுக்கிறது. இந்த படத்தில் ஆபாசம், வன்முறை நிறைந்து இருப்பதாக கூறுவது ஏற்க கூடியது அல்ல. படத்தில் ஆங்கில சொற்கள் அதிகளவில் இருப்பதாக கூறுவதையும் ஏற்க கூடியது அல்ல.
த்ரீ (3) என்ற படத்தில் ஆங்கிலம் வார்த்தைக கொண்ட பாடல் உள்ளது. மான் கராத்தே படத்திலும் ஓபன் தி டாஸ்மாக் என்ற ஆங்கில கலப்பு கொண்ட பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், அந்த படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும்போது, எங்களது படத்துக்கு அந்த சலுகை வழங்காதது உள் நோக்கம் கொண்டது’ என்று வாதிட்டார்.
நண்பேன்டா படத்துக்கு வரிச்சலுகை கேட்பதை விட்டுவிட்டு தனுஷ் தயாரித்த 3 படத்தையும், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த மான்கராத்தே படத்தைப் பற்றியும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டதன் பின்னணியில் உதயநிதி இருப்பதாக சொல்லப்படுகிறது.
படத்தயாரிப்பு மற்றும் பட விநியோகத்தில் உதயநிதி ஸ்டாலினை பின்னுக்குத்தள்ளிவிட்டு தனுஷ், ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் முன்னணியில் உள்ளனர்.
அது பொறுக்காமல்தான் அவர்களின் படங்களைப் பற்றி கோர்ட்டில் போட்டுக் கொடுத்திருக்கிறார் என்று உதயநிதியைப் பற்றி கழுவி ஊற்றுகின்றனர் படத்துறையில்.
0 comments:
Post a Comment