மம்முட்டி, மோகன்லால் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தவர் ஜோதிர்மயி. இவர் தமிழிலும் தலைநகரம், நான் அவன் இல்லை என பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கல்லூரியில் உடன் படித்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் நிஷாந்த் என்பவரை ஜோதிர்மயி காதலித்து, 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் ஜோதிர்மயி பிரபல பட தயாரிப்பாளரும்,இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான அமல் நீரத்தை இன்று திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் கொச்சி ரிஜிஸ்டர் அலுவலகத்தில் மிக எளிமையாக நடைபெற்றது. மிக நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment