அமெரிக்க நிறுவனமான அப்பிள், இம்மாதம் 24 ஆம் திகதி 9 நாடுகளில் தனது கை கடிகாரத்தை அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால், சுவிட்சர்லாந்து மக்கள் இந்த அப்பிள் கை கடிகாரங்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் 1985 ஆம் ஆண்டு காப்புரிமை விதியின் படி, அப்பிள் நிறுவனத்தின் முத்திரை (Logo) மற்றும் ‘Apple’ என்ற வார்த்தை உள்ளிட்டவைகளை அப்பிள் கை கடிகாரத்தில் பயன்படுத்தி சுவிட்சர்லாந்தில் விற்பனை செய்ய கூடாது.
தற்போது இந்த காப்புரிமையானது Leonard கை கடிகார நிறுவன தலைவரான William Longe என்பவரிடம் உள்ளது.
இந்த காப்புரிமை இந்தாண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி நிறைவு பெறுவதால், அதற்கு பின்னரே அப்பிள் நிறுவனத்தின் கை கடிகாரங்கள் சுவிஸ் சந்தைக்குள் வர முடியும்.
அப்பிள் கை கடிகாரத்திற்கு சுவிஸ் உள்ளிட்ட பல நாடுகளில் கடும் எதிர்ப்பார்ப்பு இருந்தாலும், சுவிஸ் மக்கள் அப்பிள் கை கடிகாரத்தை பெற இன்னும் 9 மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக Tim Cook கடந்த 2011 ஆம் ஆண்டு பொறுப்பேற்றதை தொடர்ந்து, முதன் முதலாக தனது நிறுவனத்தின் மூலம் கை கடிகாரங்களை அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment