இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே அனேகன், ஷமிதாப் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த தனுஷ், தற்போது 'மாரி' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனுஷ் அடுத்து மீண்டும் வேலையில்லா பட்டதாரி' பட இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த புதிய படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை படக்குழுவினர் தற்போது முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த படத்திற்கு 'டீ கடை ராஜா' என்ற பெயரை இயக்குனர் வேல்ராஜ் தேர்வு செய்திருப்பதாக படக்குழுவினர்களால் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தின் டைட்டில் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றும் விரைவில் இந்த படத்தின் டைட்டிலை வேல்ராஜ் அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்காக தனுஷ் மீசையை எடுத்துவிட்டு இளமையாக தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மாரி, டீ கடை ராஜா ஆகிய இரண்டு படங்களை தவிர்த்து வெற்றி மாறன் இயக்கத்தில் சூதாடி' என்ற படத்திலும் தனுஷ் விரைவில் நடிக்கவுள்ளார்.
0 comments:
Post a Comment