↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
முனி, முனி 2 காஞ்சனா படங்களை அடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள 'காஞ்சனா 2' திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் ரிலீஸாகி மாபெரும் ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த படம் இன்னும் சில நாட்களில் திரையிடப்படவுள்ளது.
ராகவா லாரன்ஸ், டாப்சி, கோவை சரளா, பூஜா, நித்யாமேனன், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். சத்யா, தமன், ஐஸ்வமித்ரா, மற்றும் அறிமுக இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் ஆகியோர் இந்த படத்திற்காக மொத்தம் ஐந்து பாடல்களை இசையமைத்துள்ளனர்.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் பாடலான 'சண்டிமுனி' என்ற பாடலை லியோன் ஜேம்ஸ் கம்போஸ் செய்துள்ளார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பல வருடங்கள் பணிபுரிந்த நோயல் ஜேம்ஸ் அவர்களின் புதல்வனான லியோ ஜேம்ஸ், மூன்று வயதில் இருந்தே ஏ.ஆர்.ரஹ்மான் இசையை கேட்டிருப்பதாகவும், பலமுரை ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்ததை நேரில் பார்த்த அனுபவம் இருப்பதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய பாடலில் கண்டிப்பாக ரஹ்மானின் இன்ஸ்பிரஸ்ஷன் இருக்கும் என்று கூறிய அவர், ஏ.ஆர்.ரஹ்மான் தான் தனது மானசீக குரு என்றார். மேலும் 'காஞ்சனா 2' படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்த விதம் குறித்தும் லியோ ஜோன்ஸ் கூறியுள்ளார்.
தனது நண்பர் சக்திஸ்ரீ கோபாலனுடன் இணைந்து 'வாய்யா என் வீரா' என்று தொடங்கும் பாடல் ஒன்றை கம்போஸ் செய்து பிரபல வீடியோ இணையதளம் ஒன்றில் பதிவு செய்ததாகவும், அந்த வீடியோவை பார்த்த ராகவா லாரன்ஸ் தன்னை உடனடியாக நேரில் வரச்சொல்லி 'காஞ்சனா 2' படத்தின் மிக முக்கியமான பாடலான 'சண்டிமுனி' என்ற கிளைமாக்ஸ் பாடலை கம்போஸ் செய்யும் வாய்ப்பை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment