அல்ப்ஸ் மலைகளில் மோதிய விமானத்தையோட்டிய துணை விமானி, தற்கொலை செய்துகொள்ளும் முறைகள் குறித்தும், விமானக் கட்டுப்பாட்டு அறையின் கதவின் பாதுகாப்பு குறித்தும் இணையத்தில் தேடியுள்ளதாக ஜெர்மன் நாட்டு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சக விமானியான அண்டிரிஸ் லுபிட்ஸ் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த தொடு கணியை கைப்பற்றிய புலனாய்வாளர்கள், அவர் எந்தெந்த இணையப் பக்கங்களுக்குச் சென்றார் என்பதை கண்டறிந்தனர்
இதேநேரம், விமானத்தின் இரண்டாவது கறுப்புப் பெட்டியை தாம் கண்டறிந்துள்ளதாக பிரன்ஞ்சு விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விமானம் வேண்டுமென்றே மலை மீது செலுத்தப்பட்டது என்பதைக் காட்டும் தரவுகள் இந்த கறுப்புப் பெட்டியில் இருக்கும் என்று கருதப்படுகிறது.
அண்டிரிஸ் லுபிட்ஸ் அந்த விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் தனியாக இருந்துள்ளார். தலைமை விமானி கட்டுப்பாட்டு அறைக்கு வெளியே சென்றிருந்த சமயம் கதவு சாத்தப்பட்டுள்ளதை விமானியறை ஒலிபதிவுக் கருவி காட்டியுள்ளது.
விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் விமானத்தினுள் பதிவு செய்யப்பட்ட காணொளி? அலறும் பயணிகள்
பிரான்ஸ் நாட்டு அல்ப்ஸ் மலையில் மோதி அண்மையில் விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் விமானத்திற்குள்ளிருந்து பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காணொளியொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கையடக்கத் தொலைபேசி ஊடாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் காணொளி தம்மிடம் உள்ளதாக பிரான்ஸ் நாட்டு ஊடகமான பெரிஸ் மட்ச் மற்றும் ஜெர்மன் ஊடகமான பெல்ட் என்பவைகளே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
குறித்த காணொளியை தாம் பார்வையிட்டதாகவும் விபத்து நடந்த இடத்தில் இருந்த ஒருவரின் ஊடாக இதனை பெற்றுக் கொண்டதாக பெரிஸ் மெட்ச் ஊடகம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் பயணித்தோர் பயத்தில் அலறுவதும், அவர்கள் தமக்கு நடக்கப் போவது தொடர்பில் அவதானத்துடன் இருந்தமையையும் காணொளியைப் பார்க்கும் போது தெளிவாக புரிவதாக பெரிஸ் மெட்ச் தெரிவித்துள்ளது.
இறுதியில் விமானம் மோதும் சத்தமும் அத்துடன் பயணிகளின் அலறல் சத்தமும் அதிகரிப்பது அந்தக் காணொளியில் தெளிவாகக் கேட்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மன்விங்ஸ் விமானம் 150 பயணிகளுடன் கடந்த 24ம் திகதி அல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment