கடந்த சில வாரங்களாக சின்ன பட்ஜெட் படங்களே தமிழ் சினிமாவை ஆட்சி செய்ய, இந்த வாரம் கொம்பன், சகாப்தம், நண்பேண்டா என பெரிய படங்கள் களம் இறங்கியுள்ளது.
இதில் சகாப்தம் விஜயகாந்தின் மகன் என்பதால் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், இதில் நண்பேண்டா படத்திற்கு கலவையான விமர்சனம் வரத்தொடங்கியுள்ளது. இதானால், இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெருவது கடினம் தான் என கூறப்படுகிறது.
சகாப்தம் நல்ல ஓப்பனிங் இருந்தாலும், விஜயகாந்த் அளவிற்கு அவர் மகன் முதல் படம் இல்லை, எதற்கு முதல் படத்திலேயே இத்தனை ஆக்ஷன் காட்சிகள் என சில நெகட்டிவ் கமெண்டுக்கள் வரத்தொடங்கியுள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்க்கையில் பல பிரச்சனைகளுடன் வெளிவந்த கொம்பன் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சென்னையின் பிரபல திரையரங்கில் இப்படத்திற்கு ஒரு நாளைக்கு 20 காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நண்பேண்டாவிற்கு 13 காட்சிகள் தானாம். எப்படி பார்த்தாலும் கொம்பன் தான் இந்த ரேஸில் டாப்.
0 comments:
Post a Comment