↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு நிச்சயமிக்கப்பட்ட பிரியங்கா சவுத்ரி திருமணத்திற்கு பிறகு வேலையை விட்டுவிட்டு பொறுப்புள்ள மனைவியாக மட்டும் இருக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும், அவரது தோழி பிரியங்கா சவுத்ரிக்கும் ஏப்ரல் 1ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நாளை அவர்களின் திருமணம் டெல்லியில் சிறப்பாக நடைபெறுகிறது. திருமணத்தில் கிரிக்கெட் வீரர்கள் தவிர பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் மோடி, அகிலேஷ் கலந்து கொள்வது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
கணவன், மனைவியாகப் போகும் ரெய்னா, பிரியங்கா பற்றிய விவரம் வருமாறு,
காஷ்மீர் மாநில புரோகித குடும்பத்தைச் சேர்ந்த ரெய்னாவின் குடும்பத்தார் 1980களில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் குடியேறியுள்ளனர். பிரியங்கா சவுத்ரியின் குடும்பம் உத்தர பிரதேச மாநிலம் பராத்தைச் சேர்ந்தது. தற்போது அவர்கள் மீரட்டில் வசித்து வருகிறார்கள்.
ரெய்னா அம்மாவின் நெருங்கிய தோழியின் மகள் பிரியங்கா. ரெய்னாவின் தந்தையும், பிரியங்காவின் தந்தையும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளனர். பிரியங்கா காசியாபாத்தில் உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்துள்ளார்.
பிரியங்காவுக்கு அபிஷேக் சவுத்ரி, விவேக் சவுத்ரி என்று 2 சகோதரர்கள் உள்ளனர். அபிஷேக் சென்னையிலும், விவேக் நொய்டாவிலும் சாப்ட்வேர் என்ஜினியர்களாக உள்ளனர். முதலில் பெங்களூரில் வேலை பார்த்த பிரியங்கா தற்போது நெதர்லாந்தில் பணியாற்றி வருகிறார்.
திருமணத்திற்காக விடுப்பு எடுத்து இந்தியா வந்துள்ளார் பிரியங்கா. இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு அவர் வேலையை விடக்கூடும் என்று கூறப்படுகிறது. பிரியங்கா பெங்களூரில் வேலை பார்த்தபோது தான் அவருக்கும், ரெய்னாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment