↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். அவர் விடுதலையாகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தீர்ப்பு எப்படி வந்தாலும், தமிழகத்தில் பெரிய மாற்றங்கள் நிகழாது' - அதிரடியாக ஆரம்பிக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு.
அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ஊழல் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டால், அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு மக்கள் ஆதரவைப் பெறக்கூடிய பலமான எதிர்க்கட்சி எதுவும் இங்கு இல்லை. காரணம், எதிர்க்கட்சித் தலைவர்களும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி நீதிமன்றத்துக்கு நடையாக நடக்கிறார்கள்.
இங்கே, ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். அவர் விடுதலையாகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தீர்ப்பு எப்படி வந்தாலும், தமிழகத்தில் பெரிய மாற்றங்கள் நிகழாது' - அதிரடியாக ஆரம்பிக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு.
அவர் விகடன் சஞசிகைக்கு வழங்கிய பேட்டியின் சில முக்கியமானவை வருமாறு,
தமிழகத்தில் நிழல் முதலமைச்சர், நிஜ முதலமைச்சர் என இரு முதலமைச்சர்கள் இருக்கிறார்களே?
அரசியல் சட்டப்படி, ஆளுநருக்கு ஆலோசனை வழங்கக்கூடிய ஒரு முதலமைச்சரின் தலைமையில் அமைச்சரவை இயங்க வேண்டும். ஆனால், பல மாநிலங்களில் பலம் வாய்ந்த அரசியல் தலைமைகள் சிறைக் குற்றவாளி ஆக்கப்பட்ட பின், அவர்களது நெருங்கிய உறவினரை முதலமைச்சர் ஆக்கிவிட்டு கட்சி அலுவலகத்தில் இருந்து ரிமோட் கன்ட்ரோலில் ஆட்சி நடத்தியதைப் பார்த்தோம். உதாரணம், பீகார். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் ஓர் அசல் முதலமைச்சரும் அவரது பின்னணியில் ஒரு நிழல் முதலமைச்சரும் செயல்படுவதைப் பார்க்கிறோம். ரிமோட் கன்ட்ரோலுக்குப் பதிலாக, பதவி விலகிய முதலமைச்சரின் நேரடி ஆட்சி வேறு எங்கும் நடைபெற்றது இல்லை.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்சி எப்படி உள்ளது?
இந்த ஆட்சி, அரசியல் சட்டப்படி நடைபெறவில்லை. அரசியல் சட்டப்படி, பதவியில் அமர்த்தப்பட்ட முதலமைச்சர் இன்னும் செயல்படாதவராகவே உள்ளார். முதலமைச்சர் ஆசனத்தில் உட்காருவதற்கே இதுநாள் வரை தயக்கம் காட்டிய அவரால், எந்தவித முடிவையும் எடுக்க முடியவில்லை. அவரது கைகள் கட்டப்பட்டுள்ளன. மக்கள் முதல்வர், மக்கள் தலைமைச் செயலாளர், மக்கள் காவல் துறை அதிகாரி இவர்கள் கொண்ட குழுதான் இன்று தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகிறது. இது பெரும் தவறு.
தமிழக அமைச்சர்கள், அவர்களின் துறை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் காட்டிலும், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என பிரார்த்தனை செய்வதில்தான் கவனம் செலுத்தி வருகிறார்களே?
இந்தியாவின் தலைசிறந்த வழக்குரைஞர்களை மிகுந்த பொருட்செலவில் அமர்த்தி வழக்கு நடத்திக்கொண்டிருக்கும் நிலையில் ஏன் இந்த ஏற்பாடுகள் எனத் தெரியவில்லை. அமைச்சரவை, எந்த முக்கிய முடிவையும் எடுப்பது இல்லை. உதாரணமாக, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைந்து தயார் நிலையில் இருப்பதாகவும், ஜெயலலிதா வந்து தொடங்கி வைக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இதுபோல ஏராளமான திட்டங்கள், தொடக்க விழாக்கள் அனைத்தும் தேக்க நிலையில் காத்திருக்கின்றன. இது ஒரு டம்மி அமைச்சரவை, செயல்பாடு இல்லாத அமைச்சரவை. இந்தத் தவறான போக்கை அனுமதிக்கவே முடியாது.
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவரின் பெயரும் புகைப்படமும், அரசின் அதிகாரபூர்வ அறிவிப்புகளில் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இது சம்பந்தமாக நீதிமன்றமும் அமைதிகாக்கிறதே?
நீதிமன்றம் தன்னிடம் வரும் அரசியல் தொடர்பான வழக்குகளில் முறையான தீர்ப்பு வழங்கத் தயங்குவதும் அல்லது பிரச்னையைத் தட்டிக்கழிக்க முயல்வதுமே இதற்கான காரணம். இது அரசின் கொள்கை முடிவு எனச் சொல்லி, அரசைப் பற்றி புகார் கூறும் மனுக்களில் அரசையே முடிவெடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிடுவது கொடுமையிலும் கொடுமை.
ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பயன்படுத்தும் வழக்கில், நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் சொன்னது. நான்கு மாதங்களைக் கடந்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இப்போதும் அவரது புகைப்படங்கள்தான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன.
இப்போது நீதிமன்றம், தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு தொடுக்குமா என்ன? டிராஃபிக் ராமசாமி போன்றோர் பேனரைக் கிழிக்கும்போது 'நீங்கள் சட்டத்தைக் கையில் எடுக்கக் கூடாது’ எனச் சொல்கிறார்கள். சரி, அவர் எடுக்க வேண்டாம். ஆனால், நீதிமன்றமே சட்டத்தைக் கையில் எடுக்கவில்லை என்றால் எப்படி? இது மிக மிக மோசமான உதாரணம். நீதிமன்றம் தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது.
தமிழக எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்படக்கூடிய கட்சியைப் பற்றி மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. ஆளும் கட்சியை கைநீட்டிக் குற்றம் கூற முடியாத அளவுக்கு, பதவியில் இருக்கும்போது அவர்களும் அனைத்துவிதமான முறைகேடுகளிலும் ஈடுபட்டிருந்தனர். அதனால், மக்கள் அல்லல்பட்டு, அழுது, கண்ணீர் வடித்தாலும், ஆளும் கட்சியைத் தோற்கடிக்கும் படையாக அதை மாற்றும் வலிமை எதிர்க்கட்சிகளுக்கு இப்போது இல்லை.
மோடி ஆட்சி?
மோடி மஸ்தான்களால் பாம்பைப் படமெடுத்து ஆடச் செய்யத்தான் முடியுமே தவிர, பாம்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியின் ஜெராக்ஸ் போலத்தான் நடக்கிறது மோடி ஆட்சி.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு, அ.தி.மு.க அரசின் ஆதரவு மறைமுகமாக எதையோ உணர்த்துகிறது’ என கருணாநிதி குற்றம் சுமத்தி இருக்கிறாரே?
தி.மு.க ஆட்சியில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்க, 33 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை அடிமாட்டு விலையில் பிடுங்கியதை எவரும் மறக்க முடியாது. 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பயன்படுத்தி பல மாநிலங்களின் அரசியல் குண்டர்கள் கோடிக்கணக்கான ரூபாய் சுருட்டி இருப்பதை, முறையான ஒரு விசாரணை கமிஷன் அமைத்தால் கண்டுபிடிக்க முடியும். அதே சமயம், இந்தச் சட்டத்தை காங்கிரஸ் கொண்டுவந்தபோது எதிர்த்த அ.தி.மு.க., இப்போது பா.ஜ.க-வை ஆதரிக்கிறது என்றால், அந்தக் கட்சிக்கு வேறு நிர்பந்தங்கள் இருக்கலாம்.
மரண தண்டனை குறித்து இன்றும் குழப்பம் இருக்கிறதே?
அரிதிலும் அரிதான காரணங்களுக்கு மரண தண்டனை வழங்கலாம் எனக் கூறும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, சரியான வழிகாட்டுதலை வழங்காததால் தவறான பல தீர்ப்புகள் வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான நேரங்களில், முறையான வக்கீலை வைத்துக்கொள்ள முடியாதவர்களுக்கும், சாதி கட்டுமானத்தின் கீழ்நிலையில் உள்ளவர்களுக்குமே மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர்க்க ஒரே வழி, மரண தண்டனைக்கு மரண தண்டனை விதிப்பதே!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top