↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மத்திய இணை அமைச்சர் கிரிராஜ்சிங் மிக மோசமாக விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கிரிராஜின் தொடரும் வன்மப் பேச்சுகளைக் கண்டித்து அவரை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்றது முதல் மத்திய அமைச்சர்கள், பாரதிய ஜனதா தலைவர்கள் பலரும் பொறுப்பற்ற முறையில் மிகக் கேவலமான கருத்துகளைத் தெரிவிப்பதும் பின்னர் வருத்தம் தெரிவிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.
அண்மையில் கோவாவில் செவிலியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர், செவிலியர்கள் கடும் வெயிலி்ல் அமர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இப்படி செய்வதால் அவர்கள் தோல் கறுத்துவிடும். அப்படி கறுப்பாகிவிட்டால் அவர்களின் திருமணம் சிக்கலாகும் என்று கிண்டலடித்திருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த நிலையில் பீகார் மாநிலம் ஹாஜிபூரில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து மிக மோசமாக கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அதாவது, ராஜிவ் காந்தி நைஜீரியா நாட்டு பொண்ணையா திருமணம் செய்தார்? வெள்ளையாக இருக்கும் சோனியாவைத்தானே திருமணம் செய்தார்?
ராஜிவ் காந்தி நைஜீரியா பொண்ணை திருமணம் செய்திருந்தா அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஏற்றிருப்பார்களா? சோனியாவின் தோல் நிறம் வெள்ளை.. அதனால் அவரை காங்கிரஸ் கட்சியினர் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று சகட்டுமேனிக்கு பேசியிருக்கிறார் கிரிராஜ். அவரது இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதுதான் பாரதிய ஜனதாவின் மனநிலை.. கிரிராஜ் தமது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் பிருந்தா காரத் கூறுகையில், கிரிராஜின் இந்த பேச்சு குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாக கண்டிக்கவேண்டும். மவுனமாக இருப்பது இது போன்று இனவெறுப்பைத் தூண்டும் பேச்சுக்கு ஊக்கம் தருவதாக அமையும் என்று கூறியுள்ளார். இதனிடையே தாம் தெரிவித்த கருத்துகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கிரிராஜ் கூறியுள்ளார். ஆனால் இந்த வருத்தத்தை நிராகரித்துள்ள எதிர்க்கட்சிகள் கிரிராஜ்சிங்கை மத்திய அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
Home
»
congress
»
news
»
news.india
»
sonia
» சோனியா ஒரு வேளை நைஜீரியப் பெண்ணாக இருந்திருந்தால்... மத்திய அமைச்சரின் மட்டமான பேச்சு!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment