சென்னை: ‘ஒரு பாடலுக்கு ஆடுவதை விமர்சிக்கக் கூடாது’ என்றார், பூர்ணா. இதுபற்றி அவர் கூறியதாவது:தெலுங்கில் மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன் நடிக்கும் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆட இருக்கிறேன். இதனால் என்னை பலர் விமர்சிக்கிறார்கள். ஏதோ நான் பெரிய தவறு செய்துவிட்டது போல் குதிக்கிறார்கள். இது தேவையில்லாத விஷயம்.
ஒரு பாடலுக்கு ஆடுவது அர்த்தமற்ற செயல் அல்ல. ரசிகர்கள் விரும்பும் நடிகையைத்தான் ஒரு பாடலுக்கு ஆட இயக்குனரும், தயாரிப்பாளரும் ஒப்பந்தம் செய்கிறார்கள். தெலுங்கில் நான் ஆடுவதற்கு முன்பே, தமிழில் ‘அப்பாடக்கர்’ என்ற படத்தில் ஆடியிருக்கிறேன். தெலுங்கில் டிரெடிஷனல் பாடலாக உருவாகும் அதில் பாவாடை, தாவணி அணிந்து ஆடுகிறேன். கிளாமர் இருக்காது. அதனால்தான் ஒப்புக்கொண்டேன்.
0 comments:
Post a Comment