↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
samantha-sidharthசமந்தா, சித்தார்த் இருவரும் காதலித்து வருவதாக கடந்த இரண்டு வருடங்களாக ஊடகங்களில் கிசுகிசுக்கள் பரவி வருகிறது.
அதற்கு ஏற்றாற் போல் இருவரும் ஐதராபாத்தில் நடைபெற்ற சில விழாக்களிலும், சித்தார்த் நடித்த காவியதலைவன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் சமந்தா கலந்து கொண்டு இந்த கிசுகிசு உண்மையாக இருக்குமோ என்று மற்றவர்களை சந்தேகப்பட வைத்தது.
இதனிடையே ஐதராபாத்தில் வெளியாகும் பிரபல ஆங்கில பத்திரிக்கையில், நீண்ட நாட்களாக காதல் ஜோடியாக சுற்றி திரிந்த சமந்தா, சித்தார்த் இருவரும் பிரிந்து விட்டதாக செய்தி ஒன்றை வெளியிட்டது. மேலும் பிரிவிற்கான காரணம் தெரியவில்லை என்றும் ஆனால் இதனால் சமந்தாதான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடுப்பான சமந்தா தனது டுவிட்டரில் அந்த நாளிதழை காய்ச்சி எடுத்துள்ளார். அதில், “இன்று பத்திரிகையில் வந்த செய்தி என்னை பாதிக்கப்பட்டவராக காட்டியுள்ளது. அப்படியெல்லாம் இல்லை. சித்தார்த் ஒரு நல்ல மனிதர். இப்படிப்பட்ட ஒரு சார்பான செய்திகளை வெளியிடுவதை மீடியாக்கள் நிறுத்த வேண்டும். இது தனிப்பட்ட விஷயம், ஸ்டாப்”, எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top