தமிழ் சினிமா ரசிகர்களை தன் மெலடியால் மிதக்க வைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு தான் இசையமைத்த முதல் படத்தின் ஆல்பத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் ஹாரிஸ்.
தன் இளமை பருவத்திலேயே ஹாலிவுட்டின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மீது கொண்ட அன்பால், அவரை போலவே நாமும் பெரிய இசையமைப்பாளராக வேண்டும் என்று கிட்டரை தூக்கி கொண்டு வெளிநாட்டிற்கு படிக்க சென்றார். ஆசியாவிலேயே இசைத்துறையின் சிறந்த மாணவர் என்று முதல் 10 இடத்திற்குள் வந்தார்.
இதன் பின் ஆஸ்கர் நாயகன் ரகுமானிடம் சில நாட்கள் பணிபுரிந்தார். இதை தொடர்ந்து இயக்குனர் கௌதமுடன் இவர் பணியாற்றிய மின்னலே, ரசிகர்கள் மனதில் ப்ளீச் என்று ஒலித்தது. முதல் படமே இமாலய வெற்றி பெற மஜ்னு, சாமுராய், லேசா லேசா, சாமி, கஜினி, வேட்டையாடு விளையாடு, நண்பன் தற்போது என்னை அறிந்தால் வரை இவரின் வெற்றி பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
தமிழ் சினிமாவில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை தவிர கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா, மாதவன், ஜீவா, விஷால், ஜெயம் ரவி என அனைவரின் படத்திற்கும் இசையமைத்து விட்டார். அதிலும் சமீபத்தில் வெளிவந்த இவரின் என்னை அறிந்தால் படத்தின் ஆல்பம் மாபெரும் வெற்றி பெற்றது.
புதுவருடமே வெற்றியுடன் ஆரம்பிக்கை இதை தொடர்ந்து வெளிவரும் அவரின் அத்தனை ஆல்பமும் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள். மெலடி கிங் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment