↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad குளிர்காலம் என்றாலே நமது உணவு பழக்க வழக்கங்களில் கண்டிப்பாக மாற்றம் கொண்டு வரவேண்டும்.
குளிர்காலம் என்றாலே சளி, ஜலதோஷம் பிடிக்கும் என்பதற்காக பழங்களை சாப்பிடுவதையே நிறுத்திவிடுவார்கள்.
இவ்வாறெல்லாம் சரியாக சாப்பிடாமல் இருந்தால் உடலை எந்த ஒரு கிருமிகள் தாக்கினாலும், அவை எளிதில் உடலில் புகுந்து தங்கிக் கொள்ளும் நிலை ஏற்படும்.
எனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்  கொள்ள வேண்டும்.
பசலைக் கீரை
பசலைக் கீரையில் அதிகளவு சத்துக்கள் உள்ளது, இதனை உணவில் சேர்த்து வருவதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்ந்து நோய் தாக்காமல் உடலை பாதுகாக்கும்.
கொய்யாப் பழம்
இந்த பழத்தில் லைகோபைன் என்னும் பொருள் இருப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக்கூடிய இப்பழம், அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது, இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்
குளிர்காலத்தில் சாதாரண பழங்களை சாப்பிடுவதை விட, நட்ஸ் மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
மேலும் கிருமிகள் எளிதில் தாக்காமல் உடலை பாதுகாக்கும்.
கேரட்
கேரட் என்றாலே நம் நினைவுக்கு வருவது கண்களுக்கு நல்லது என்பது தான், கேரட்டை இயற்கையின் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவு இதில் வைட்டமின்களான பி, சி, டி, ஈ மற்றும் கே உள்ளன.
இதில் உள்ள கரோட்டீன என்னும் பொருள் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாறிவிடுகிறது. எனவே உணவில் கேரட்டை சேர்ப்பது அவசியமாகிறது.
கிவி
வைட்டமின் சி நிறைந்துள்ள இப்பழத்தின் மேல் சிறிது உப்பை தூவி காலை அல்லது மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு சத்துக்கள் கிடைப்பதுடன், வயிறு நிறைந்து இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
ஆரஞ்சு
குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க போதிய அளவில் வைட்டமின் சி அவசியமாகும், இவற்றை தடுக்க போதிய நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது.
எனவே ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வேர்க்கடலை
குளிர்காலத்தில் அதிகம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று வேர்க்கடலை, இதனை வறுத்ததாகவோ, உப்பாகவோ அல்லது சாதாரணமாகவோ எடுத்துக் கொண்டால் உடலில் வெப்பம் சரியான அளவு இருப்பதுடன் புரோட்டீனும் அதிகம் கிடைக்கும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top