ஐ
ஐ படம் உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுகிறது. ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்துக்கு இங்கிலாந்து, அமெரிக்காவில் அதிக அரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. சீனாவிலும் இந்தப் படம் வெளியாகிறது.
ஆம்பள
‘ஆம்பள' படத்தில் விஷால், ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கியுள்ளார். காதல், காமெடி படமாக தயாராகியுள்ளது. இந்த படத்தில் நடிகை குஷ்பு பாடல் காட்சியொன்றில் நடனம் ஆடி உள்ளார்.
டார்லிங்
‘டார்லிங்' படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ரிக்கிகல் ராணி நடித்துள்ளார். தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘பிரேம கதா சித்திரம்' படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘டார்லிங்'.
என்னை அறிந்தால்
அஜீத்தின் ‘‘என்னை அறிந்தால்'' படம் பொங்கலுக்கு ரிலீசாவதாக இருந்தது. ஆனால் இசை கோர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் 29-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment