↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சென்னை: தெலுங்கில் சரளமாகப் பேச பயிற்சி எடுத்துவருகிறார் கார்த்தி.கார்த்தி நடிக்கும் தமிழ்ப் படங்கள் தெலுங்குக்கு மொழிமாற்றம் செய்யப்படும் போது அவரே டப்பிங்கும் பேசுவார். சூர்யா நடித்த ஒரு படத்துக்கும் கார்த்தியே பேசினார். இந்நிலையில் நாகார்ஜுனாவுடன் இணைந்து நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார் கார்த்தி. இதில் அவர் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

 இந்தப் படத்தில் தெளிவாக தெலுங்கு பேச வேண்டும் என்பதற்காக கார்த்தி பயிற்சி எடுத்துவருகிறார். ‘தமிழ், தெலுங்கில் உருவாகும் படம் அது. கார்த்திக்கு தெலுங்கு தெரியும் என்றாலும் இன்னும் தெளிவாகப் பேசுவதற்கு சிறப்புப் பயிற்சி எடுக்கிறார். படம் ஆரம்பிப்பதற்கு முன்பே, தெளிவாகப் பேச வேண்டும் என்று அதற்கான முயற்சியில் இறங்கியுள் ளார்’ என்று கார்த்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top