இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பான ஐ ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. அதனை தடை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற பி.வி.பி நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கொடுக்கவில்லை. இதனால், அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஐ' படத்தை மூன்று வாரங்களுக்கு வெளியிட இடைக்காலத் தடை விதித்தார். ஜனவரி 30க்குள் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பதில் அளிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பி.வி.பி நிறுவனத்தைச் சார்ந்த அரசுக்கு தர வேண்டிய 17 கோடி கடனை கொடுத்துவிட்டதால், அரசு தனது வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து சொன்னபடி வருகிற ஜனவரி 14ம் தேதி ஐ படம் வெளியாக உள்ளது.
0 comments:
Post a Comment