அன்பே சிவம் படத்தில் கமல் கூறுவது போல் கடவுள் மனிதர்களிடம் தான் இருக்கிறார் என்பதை நிருபித்தவர் லாரன்ஸ். ஒரு சாதரண மனிதனாக சினிமாவிற்குள் வந்த இன்று இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் நல்ல உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதராக வளர்ந்துள்ளார்.
பிரபுதேவாவின் டான்ஸ் குரூப்பில் கடைசி ஆளாக நின்ற இவர், காலப்போக்கில் சூப்பர் ஸ்டார் ஆசிர்வாதத்தை வாங்கி கொண்டு நடன இயக்குனராக தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு இவரின் நடன அசைவை கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
ஒரு ரஜினி ரசிகனாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து பின் ரஜினிக்கே ஒரு படத்தில் நடன இயக்குனராக பணியாற்றினார் என்றால், இதை விட ஒரு மனிதர் என்ன சாதிக்க வேண்டும். பின் நடிகன்+இயக்குனராக முனி, காஞ்சனா என அதிலும் வெற்றி பவனி வந்தார்.
இத்தனை உயரத்தில் இருக்கும் லாரன்ஸ் தன் சிறு வயதில் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர். பின் ராகவேந்திரா சுவாமி கோவிலுக்கு சென்று வந்ததால் தனக்கு குணமாகியது என்று, தன் பெயரை ராகவா லாரன்ஸ் என்று மாற்றி கொண்டார்.
இதுமட்டுமில்லாமல் பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். பலரின் மருத்துவ செலவை இவரே ஏற்று கொள்கிறார். தற்போது சொல்லுங்கள் கமல் கூறியது சரி தானே? இந்த உயர்ந்த மனிதர் திரைத்துறையில் மேலும் சாதித்து இதேபோல் என்றும் பலருக்கு உதவிட வேண்டும். சினி உலகம் சார்பாக ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment