↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பிரான்ஸில் கிழக்கு பாரிஸ் பகுதியில் யூதர் ஒருவருக்குச் சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் ஆயுததாரிகள் புகுந்து பலரை பணயக் கைதிகளாக் பிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வென்சென் மாவட்டத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஆயுததாரிகள் பலரை பணயக் கைதிகளாக பிடித்துள்ளதாகவும் அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இருவர் காயமடைந்துள்ளதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் கூறுகின்றன.

துப்பாக்கிப் பிரயோகத்தைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பொலிஸார் அந்தக் கடையை சுற்றி வளைத்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். உள்ளூர் பள்ளிக்கூடங்களில் உள்ள பிள்ளைகள் அவர்களின் வகுப்புகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு தானியங்கி துப்பாக்கிகளை வைத்திருப்பதாகக் கூறப்படுகின்ற ஆயததாரி, பாரிஸ் புறநகர்ப் பகுதியில் நேற்று வியாழன்று அதிகாலை பொலிஸ் பெண் ஒருவரை சுட்டுக் கொன்றவராக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

முன்னதாக, இந்த ஆயுததாரி, ஷார்லி எப்தோ சஞ்சிகை மீதான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்ற குவாஷி சகோதரர்களுடன் தொடர்புடையவர் என்று பிரான்ஸ் ஊடக வட்டாரங்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாரிஸில் ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பயங்கரவாத சம்பவம் இதுவாகும்.


இரண்டாம் இணைப்பு
இரு ஆயுததாரிகள் சுட்டுக் கொலை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தை தாக்கிய ஆயுததாரிகள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் கிழக்குப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்தி மக்களை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்தவனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள பத்திரிகை அலுவலகத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலை நடத்திய 2 பயங்கரவாதிகளை பிரான்ஸ் பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர்.
சகோதரர்களான செரீப் மற்றும் செட் கொவாச்சி ஆகியோர் ஒரு வெளிப்புற தொழில் எஸ்டேட்டில் அச்சகத்தில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பயங்கரவாத தடுப்பு போலீசார் மற்றும் இராணுவ படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

இவர்கள் ஒரு பெண்ணை பிணையக்கைதியாக சிறைபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தி பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தி, இரண்டு பேரையும் சுட்டுக்கொன்றனர்.
மேலும் பிடித்து வைத்திருந்த பிணையக் கைதிகளையும் பொலிஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top