ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்த 'ஐ' படத்தை மூன்று வாரங்களுக்கு வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம்,, '' 'ஐ'பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எங்களுக்கு கடனாக செலுத்த வேண்டிய பணத்தை இன்னும் தரவில்லை. அதனால் அவர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் 'ஐ' படத்தை தடை செய்ய வேண்டும்'' என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, '' 'ஐ' படம் வெளியிடுவதற்கு 3 வாரம் தடை விதிக்கிறேன். வாங்கிய கடனை ஆஸ்கர் ரவிச்சந்திரன் விரைவில் திருப்பித்தர வேண்டும். ஜனவரி 30-க்குள் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பதில் தர வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திட்டமிட்டபடி ’ஐ’ படம் வெளியாகும்: ஆஸ்கர் ரவிச்சந்திரன் அறிவிப்பு
இது குறித்து 'ஐ' தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை தொடர்பு கொண்டு பேசிய போது, "நாங்கள் நண்பர்களே. எங்களுக்குள்ளான இந்தப் பிரச்சினை விரைந்து தீர்க்கப்படும். எனவே 'ஐ' சொன்ன தேதியில் வெளியாகும்" என்று கூறினார்.

0 comments:
Post a Comment