கவுதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உதவியாளரான மகிழ் திருமேனி இயக்கிய ‘முன்தினம் பார்த்தேனே’ பெரிய அளவில் கவனிக்கப்படவில்லையென்றாலும் அடுத்து அவர் எடுத்த ‘தடையறத் தாக்க’ படத்தின் விறு விறு திரைக்கதையால் தன்னைக் கவனிக்க வைத்தார். நடிகர் அருண் விஜய்க்கும் அந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது அவர் ஆர்யாவை வைத்து இயக்கிய ‘மீகாமன்’ வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த ‘மீகாமன்’ கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது. ஆர்யாவை வைத்து ‘இரண்டாம் உலகம்’ எடுத்த பிவிபி தயாரிப்பு நிறுவனம் அப்படம் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை. என்றாலும் அந்நிறுவனம் மீண்டும் ஆர்யாவை வைத்தே எடுக்க முன்வந்திருக்கிறது. அதேபோல் தனது முந்தைய படங்களை அதிரடி ஆக்ஷன் படங்களாக இயக்கிய மகிழ் திருமேனி இந்தப் படத்தை முழுக்க முழுக்க வயிறு வலிக்க குலுங்கி சிரிக்கும் அளவிற்கு ஒரு முழுநீள காமெடி படமாக இயக்கவிருக்கிறாராம்.
இந்தப் படத்தில் ஆர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஆர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் படம் இதுதான்..
0 comments:
Post a Comment