சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படம் வெளியான முதல் நாளிலிருந்து தொடங்கியது அந்த எதிர்மறைப் பிரச்சாரம். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்து இன்று அதை முடிந்தவரை ஊதிப் பெரிதாக்கியுள்ளனர் தங்களை விநியோகஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சில கைக்கூலிகள்.
ஆரம்பத்தில் இந்த லிங்கா எதிர்ப்புப் பிரச்சாரத்தின் உண்மைத் தன்மை புரியாமல், அந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்த மீடியாக்காரர்கள், இன்று உண்ணாவிரதப் பந்தலில் பேட்டி கொடுத்தவர்களை ஒரு வழி பண்ணிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
மீடியா நிருபர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்ல முடியாமல், சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல ஆரம்பித்துவிட்டனர் உண்ணாவிரதக்காரர்கள்.
சாம்பிளுக்கு சில…
‘இது லிங்கா என்ற சினிமாவின் பிஸினஸ் விவகாரம்தானே… இதில் அரசியலுக்கு என்ன வேலை? சீமானையும் வேல் முருகனையும் உள்ளே கொண்டு வந்ததன் நோக்கம் என்ன?’
படம் வெளியான நாளிலிருந்தே லிங்கா நஷ்டம் என்றும், படம் சரியில்லை என்று நீங்களே கூறி வருகிறீர்கள். ஏன் இந்த பிரச்சாரம்? நீங்கள் உண்மையிலேயே லிங்கா விநியோகஸ்தரா? வேறு ஏதும் உள்நோக்கத்தோடு இதைச் செய்கிறீ்ர்களா?
ஒரு சாதாரண சினிமா பிரச்சினையில் தமிழர், கன்னடர் என்ற பிரிவினைவாதப் பேச்சு எதற்காக? இரு மாநில மக்களின் உணர்வுகளைக் கிளறப் பார்ப்பது குற்றமில்லையா?
படத்துக்கு அதிக விலை கொடுக்கச் சொன்னது யார்? நீங்களாக இஷ்டப்பட்டுதானே வாங்கினீர்கள்? ஒருவேளை 12 கோடி சம்பாதித்திருந்தால் மீதியைத் திருப்பித் தர இதே போல உண்ணாவிரதம் இருந்திருப்பீர்களா?
ரஜினி இந்தப் படத்தின் தயாரிப்பாளரோ, கதாசிரியரோ அல்லது இயக்குநரோ அல்ல. நடிகர் மட்டுமே. படத்தின் லாப நஷ்டம் அவரைச் சேராது என்பதும், நீங்கள் கொடுத்தது திருப்பித் தரமுடியாத முன்பணம் என்பதும் நன்கு தெரிந்தும், இந்த உண்ணாவிரதம் எதற்காக?
ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்கவில்லை என்கிறீர்கள்.. அப்புறம் ரஜினி பெயரை ஏன் இழுக்கிறீர்கள்? அவர் பெயருக்கு களங்கம் விளைவிக்கவா? அல்லது வேறு எந்த நடிகரை முதல் நிலைக்கு உயர்த்த இப்படிச் செய்கிறீர்களா?
லிங்காவின் முதல் காட்சியிலிருந்து இதுவரை வசூலித்த தொகை, உண்மையான கட்டண விவரம் மொத்தத்தையும் காட்டுவீர்களா?
படம் வெளியான மூன்றாம் நாளே 4.5 கோடி வசூலித்துவிட்டதாக மீடியாவில் சொன்னீர்களே… இப்போது 30 நாட்கள் முடிந்த பிறகும் நான்கு கோடி நஷ்டம் என்கிறீர்களே?
தமிழகத்தில் மட்டும் படம் ரூ 73 கோடி வசூலித்ததாக கூறியுள்ளீர்கள். பிறகு எப்படி அந்தப் படம் சரியாக ஓடவில்லை என்கிறீர்கள்? ஒரு மோசமான படம் ரூ 73 கோடியை வசூலிக்குமா?
கோவையில் மட்டும் இன்னும் 40 அரங்குகளிலும், திருச்சி தஞ்சையில் 12 அரங்குகளிலும் இன்றும் படம் ஓடுகிறதே.. ஆளே இல்லாமலா படத்தை இங்கெல்லாம் ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?
-இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இந்த விநியோகஸ்தர்கள் சொன்ன பதில், “நஷ்டம் ஏற்பட்டது உண்மைங்க.. ரஜினி பேசி வாங்கித் தரணுங்க.. நாங்க லாபத்துலதான் எங்களுக்கு பங்கு கேட்கிறோம்… நஷ்டத்தில் அல்ல!”
லிங்கா நஷ்டம் என்றவர்கள், கடைசியாக சொன்னதுதான் மேலே நீங்கள் படித்தது. அதாவது லிங்கா லாபத்தில் பங்கு கேட்கிறார்களாம்!
அடுத்து சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக ஒருவர் கூறியதற்கு, அருகிலிருந்த ஒருவர் அடித்த கமெண்ட்.. ‘சாவணும் அவ்வளவுதானே.. அதுக்கு ஏன் உண்ணாவிரதம்!!’
0 comments:
Post a Comment