↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad முன்னாள் மத்திய அமைச்சர் சுனந்தா மரணத்தின் பின்னணியில் ஐ.பி.எல். முறைகேடுகள் காரணமாக இருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி டெல்லி நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூர் அன்றைய தினம் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு ஹோட்டலுக்கு திரும்பிய போது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

உடல்நலக் குறைவு காரணமாக சுனந்தா சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதிக டோஸ் கொண்ட மாத்திரைகளை சாப்பிட்டதால் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் ஹோட்டலில் சுனந்தாவுக்கும், சசிதரூக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் சசிதரூர் காங்கிரஸ் கூட்டத்துக்கு சென்று விட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சுனந்தாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் இயற்கை மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவரது மரணம் தொடர்பான சர்ச்சை அப்போது முடிவுக்கு வந்தது.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சுனந்தா மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுதிர் குப்தா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார். சுனந்தா இயற்கையாக இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடுமாறு உயர் அதிகாரிகள் தன்னை கட்டாயப்படுத்தியும், நிர்ப்பந்தப்படுத்தியும் அறிக்கை பெற்றதாக குப்தா குற்றஞ்சாட்டினார். இதேபோல் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியும் ஐ.பி.எல். முறைகேடுகளை பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்க இருந்ததாலேயே சுனந்தா கொல்லப்பட்டதாகவும் இதில் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவின் தொடர்பும் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

தற்போது டெல்லி போலீசாரும் சுனந்தா கொலை செய்யப்பட்டார் என்று அறிவித்த கையோடு ஐ.பி.எல். முறைகேடுகளை பத்திரிகையாளர்களிட அம்பலப்படுத்த இருந்ததால் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜனவரி 14-ந் தேதியன்று சுனந்தாவும் சசி தரூரும் கேரளாவில் இருந்து டெல்லி திரும்பியுள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் சுனந்தாவை இழுத்து காரில் தள்ள சசி தரூர் முயற்சிக்க அப்போது சுனந்தா அறைந்ததை பலர் பார்த்துள்ளனர். பின்னர் சசி தரூர் மட்டும் விமான நிலையத்தில் இருந்து வெளியே சென்றுள்ளார். விமான நிலையத்தில் தனியாக இருந்த சுனந்தா, தொழிலதிபரும் நெருங்கிய நண்பருமான சுனில் என்பவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். பின்னர் விமான நிலையம் வந்த சுனில், சுனந்தாவை அழைத்துக் கொண்டு டெல்லி ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அறை எண் 307-ல் இருவரும் தங்கியுள்ளனர். அப்போது ஐ.பி.எல். குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது.

இந்த தகவல்களை சசி தரூரின் உதவியாளர் நரேன், டெல்லி போலீஸ் நடத்திய விசாரணையில் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சுனிலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஐ.பி.எல். முறைகேடு தொடர்பாக ஜனவரி 17-ந் தேதியன்று பத்திரிகையாளர்களை சுனந்தா சந்திக்க இருந்ததாக தெரிவித்திருக்கிறார். இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு முதல்நாள்தான் சுனந்தா உயிரிழந்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. இதேபோல் சுனந்தாவுடன் தொடர்பில் இருந்த பத்திரிகையாளர் நளினிசிங்கும் தன்னிடம் சுனந்தா ஐ.பி.எல். தொடர்பாக பேசியதாக கூறியுள்ளார். இதனால் ஐ.பி.எல். விவகாரங்களினாலேயே சுனந்தா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐ.பி.எல். போட்டிகளுக்கான கொச்சி அணியின் பங்குகளை ரூ70 கோடி கொடுத்து வாங்கியது தொடர்பான சர்ச்சையில் சசி தரூரும் சுனந்தாவும் சிக்கியதால் சசி தரூர் தமது மத்திய அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top