அஜித், விஜய் படங்களுக்கு எப்போதும் விநியோகஸ்தர்கள் மத்தியில் போட்டி தான். அந்த வகையில் தற்போது விஜய் படத்தை விரும்பி எடுக்கும் ஒரு விநியோகஸ்தர் என்னை அறிந்தால் படத்தை வாங்கியுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளிவந்த காவலன், துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களை கோயமுத்தூரில் வெளியிட்டது சிவா காஸ்மோ என்ற நிறுவனம்.
இதில் ஜில்லா படத்தை ரிலீஸ் பண்ணும்போது படம் சரிவர போகாததால் டிக்கட் விலையை குறைக்க தியேட்டர் அதிபர்கள் கேட்டபோது அதை கோஸ்மோ மறுத்ததால், திரையரங்க உரிமையாளர்கள் ஜில்லா திரையிடுவது நிறுத்தியமை தெரிந்ததே! இதனால் பெரும் நஷ்டத்தை கோஸ்மோ அடைந்தமைகுறிப்பிடத்தக்கது!
தற்போது இந்நிறுவனம் பிரம்மாண்ட தொகை கொடுத்து என்னை அறிந்தால் கோயமுத்தூர் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பார்ப்போம் அஜித் படம் காஸ்மோவிற்கு கைகொடுக்குமா என்று.
0 comments:
Post a Comment