உதயநிதி, நயன்தாரா, சந்தானம், கருணாகரன், மனோபாலா,பட்டிமன்றம் ராஜா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'துள்ளுவதோ இளமை' பட புகழ் நடிகை ஷெரின் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தமன்னாவும் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியனும், எடிட்டிங் பணியை விவேக் ஹர்சனும் பார்த்து வருகின்றனர். உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
'நண்பேண்டா' படத்தின் பாடல்கள் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் டிரைலரை ரிலீஸான இரண்டே வாரத்தில் ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் இணையதளத்தில் பார்த்துள்ளனர்.
0 comments:
Post a Comment