டெஸ்ட் அணித்தலைவர் பதவிக்கு டோனியை விட கோஹ்லி சரியானவராக இருப்பார் என முன்னாள் இந்திய அணித்தலைவர் அசாருதீன் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி தொடர் தோல்களை சந்தித்து மோசமான முறையில் தொடரை பறிகொடுத்தது.
இதைத் தொடர்ந்து அணித்தலைவர் டோனிக்கு பலத்த எதிர்ப்பு வந்தது. அவர் டெஸ்ட் தொடருக்கு அணித்தலைவராக இருப்பது சரியல்ல என்ற பரவான கருத்து வெளிவர ஆரம்பித்தது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் அசாருதீன் இதுபற்றி கூறுகையில், சிறந்த முறையில் விளையாடினால் மட்டுமே நீண்ட காலத்திற்கு அணித்தலைவராக இருக்க முடியும். இல்லா விட்டால் அணித்தலைவர் பதவியில் நீடிப்பது என்பது கடினமான விடயம்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் மாற்றம் தேவை. நான் தெரிவாளராக இருந்தால் கண்டிப்பாக டோனிக்கு பதிலாக விராட் கோஹ்லியை டெஸ்ட் போட்டிகளின் அணித்தலைவராக நியமிப்பேன்.
இந்திய கிரிக்கெட் வாரியம் இதில் தலையிட்டு அணித்தலைவர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டும். யாரும் சிறந்த அணித்தலைவராக அணிக்கு வந்து விடவில்லை. மற்றவர்களுக்கு வாய்ப்பளித்தால் தான் சிறந்த ஒரு அணி தலைவரை அடையாளம் காண முடியும் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment