↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஓர் திரையிசை பாடலில் கவிஞர். நா.முத்துகுமார், சண்டைகள் இன்றி காதல் வளர்வதில்லை என்று குறிப்பிட்டு எழுதியிருப்பார். அது முற்றிலும் உண்மையே. காதல் வளர காரணமாக இருப்பதே சண்டைகள் தான்.
ஒவ்வொரு சின்ன, சின்ன சண்டையும் தான் காதலுக்கான உரம். உணவில் ருசி சேர்க்கும் காரத்தை போன்றது தான், காதலில் சண்டையும். ஆனால், காரம் அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது காதலர்களது வேலை.
காதலிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் காதலில் ஏற்படும் ஊடலும், அதன் பின் ஏற்படும் கூடலும் எவ்வளவு ரம்மியமாக, அழகாக, உறவின் ருசியை கூட்டுகிறது என்று. மட்டற்ற மகிழ்ச்சியும், மடை திறந்த தாவி வரும் நீரை போன்ற புது உணர்ச்சியும் தரவல்லது அந்த சின்ன, சின்ன ஊடல்கள். இனி, ஊடலுக்கு பின் கூடலில் ஏற்படும் சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்துப் பார்க்கலாம்…
கொஞ்சுதல்
என்னதான் குடுமிப்பிடி சண்டையளவிற்கு முற்றிப் போனாலும், அந்த சண்டை முடிந்த பிறகு காதலி சிறு குழந்தையென மாறி, காதலனின் சட்டை பட்டன்களோடு விளையாடியவாறு கொஞ்சும் அழகு, வேறெந்த உறவிலும் கிடைத்திடாது. குழந்தை போன்ற காதலி பெற்ற ஒவ்வொரு ஆணும், திருமணத்திற்கு முன்பே தந்தையாகிவிடுகிறான்.
அக்கறை 
திடீரென்று பூத்த புது மலரென, ஒரு சில நாட்களுக்கு அக்கறை கரைக்கடந்து ஓடும். காலை எழுந்தது முதல், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் கைப்பேசியில் அலாரம் போல அடித்துக் கொண்டே இருக்கும்.

நெருக்கம் 
நூலிழை அளவு கூட இடைவெளி இன்றி காணப்படும், நெருக்கம். சும்மாவே கட்டு கட்டுன்னு கட்டிக்கிவாங்க, இனி சொல்லவா வேண்டும். பின்னி பிணைந்து தான் இருப்பார்கள்.
முத்த மழைப் பொழியும் 
முத்த பரிவர்த்தனைகள் ஓர் நாளுக்கு பல முறை நடக்கும். அலைப்பேசி அழைப்பில் தொடங்கி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் வரை அனைத்து இடங்களிலும் முத்த மழை நிலவரம், அழுத்தம் குறையாததினால் கரை ஒதுங்காமலே காணப்படும்.
பரிசுகள்
இன்ப அதிர்ச்சி, ஆச்சரியம் என்று பல வகைகளில் பரிசுகள் பாரபட்சமின்றி வழங்கப்படும். (இதுக்கு அந்த சண்டைய போடாமலே இருந்திருக்கலாம் என்று சில சமயங்களில் ஆண்களின் மனது குமுறி அழும்!!!)
வாஞ்சை 
ஊடலுக்கு பின் கூடிய பிறகு ஏற்படும் ஒவ்வொரு சந்திப்பும் அளவுக்கு மீறிய வாஞ்சையுடன் தொடங்கும். விட்டால் தலை முடியை கூட, “ஏன் வெய்யில இப்படி சுத்துற, பாரு எப்படி போச்சு கருத்து போச்சு” என்று கூறுவார்கள்.
அசைவங்களும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன
தற்போதைய மார்டர்ன் காதல் கதைகளில், ஊடலுக்கு கூடும் போது, அதிகப்படியான நெருக்கத்தின் காரணமாக, அசைவமும் ருசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். (அசைவமா? சிக்கன்னா, மட்டனா? என்று நீங்கள் கேள்வி கேட்டால்? சாரி குழந்தாய், இந்த ஸ்லைடு உங்களுக்கானது அல்ல)

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top