↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் நஸ்ருதீன்ஷா. மூன்று தேசிய விருதுகள், மூன்று பிலிம்பேர் விருதுகள், வெனிஸ் திரைப்பட விழா விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ள 65 வயதான நடிகர் நஸ்ருதீன்ஷா, நமது சிவாஜிகணேசனுக்கு இணையானவர் என்று கூறுவதுண்டு. இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளை கொடுத்து கெளரவித்துள்ளது.
இந்நிலையில் நஸ்ருதீஷா சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தமிழ் திரைப்படங்களை பார்த்ததுண்டா? என்ற கேள்விக்கு பதில் அளித்த நஸ்ருதீன்ஷா, 'எனக்கு தமிழ் மொழியை பேசவோ அல்லது புரிந்து கொள்ளும் திறனோ இல்லாததால் நான் தமிழ் படங்களை பார்ப்பதுண்டு. ஆனால் ரஜினிகாந்த் நடித்த பல படங்களை கேள்விப்பட்டுள்ளேன். ஆனாலும் மொழி புரியாததால் அவரது படங்களையும் நான் பார்த்ததில்லை. ஆனால் தமிழ் மொழியை புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படத்தை மட்டும் நான் பார்க்க விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் தற்போதைய நிலையில் இளைஞர்களை தியேட்டருக்கு இழுக்கும் வகையில் திரைப்படங்களை எடுத்துவிட்டால் இந்திய சினிமா அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டது என்பதை நாம் தைரியமாக சொல்லிக் கொள்ளலாம்' என்றும் அவர் கூறியுள்ளார். நஸ்ருதீன்ஷா கமல்ஹாசன் நடித்த 'ஹேராம்' என்ற ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் அவர் மகாத்மா காந்தி வேடத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் என்பது அனைவரும் தெரிந்ததே.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment