கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியான படம் லிங்கா. இந்த படம் ரிலீஸான ஒரே வாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக அப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கினர்.
அதன் பிறகு பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு 12.5 கோடி நஷ்டஈடாக வழங்கப்பட்டது. இதை தயாரிப்பாளர் சங்கத்திடம் கொடுத்து விநியோகஸ்தர்களுக்கு சரிவர பிரித்து கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதனால் பொறுமையிழந்த விநியோகஸ்தர்கள் மீண்டும் ரஜினிக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர். இதுகுறித்து கடந்த வாரம் நடந்த ப்ரஸ்மீட்டில், வரும் 13ம் தேதி ரஜினியின் வீட்டுமுன் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்தனர். அது மட்டுமின்றி லிங்கா படத்தில் என்ன நடந்தது என்று விவரித்து உள்துறை அமைச்சருக்கும் மனு ஒன்றும் அளித்துள்ளார்களாம்.
இந்த தகவல் ரஜினியின் காதுக்கு போக அவர் முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்திப்பதற்காக அப்பாயிண்மென்ட் கேட்டுள்ளாராம். இதை மனதில் வைத்துதான் ரஜினி முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிற்கும் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு முதலமைச்சரை சந்திப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம். நேற்று, முன் தினம் கருணாநிதியின் பேரனும், நடிகருமான அருள்நிதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, கருணாநிதியுடனும் பேசி விட்டு வந்தார். அதனால், அவருக்கு முதல்வரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காது என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அதே சமயம், லிங்கா விநியோகஸ்தர்களுக்கு நாளை உள்துறை செயலாளரை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கிடைத்திருக்கிறதாம். எனவே லிங்கா பிரச்சனையில் நாளை புதிய திருப்பம் ஏற்படும் என்று விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர்.
0 comments:
Post a Comment