↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

என்னை அறிந்தால் படத்தின் வெற்றியை அடுத்து ஏ.எம்.ரத்னம் தல அஜித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள தல 56 படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. வீரம் படத்தின் வெற்றியை அடுத்த தல அஜித் சிவா கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்து முடிந்துள்ளது. இதில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இந்த படத்தின் வில்லனாக தேர்வு செய்யப்பட்டுள்ள கபீர் சிங், அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கவுள்ளார்களாம். இதில் அஜித்துக்கும், கபீர் சிங்குக்கும் இடையிலான சண்டைக்காட்சிகளும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும், இவரது தங்கையாக லட்சுமிமேனன் நடித்து வருகிறார். மேலும் சூரி, தம்பிராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசை அனிருத். படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top