↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சென்ற வாரம் முழுவதும், சமூக இணைய தளங்களில், பேஸ்புக் தளம் ஒரு வாரம், பராமரிப்பிற்காக மூடப்படும் என்றும், பேஸ்புக்
நிறுவனத்தால், அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைச் சமாளிக்க இயலாததால், நிரந்தரமாக மூடப்படும் என்றும் பல வதந்திகள் உலா வந்தன. இது குறித்து பேஸ்புக் நிறுவன இயக்குநர் லாரி யு குறிப்பிடுகையில், தயவு செய்து எங்களின் எதிர்காலத் திட்டப்பணிகளில் நன்றாகச் செயல்பட விடுங்கள். இது போன்ற ஆதாரமற்ற பொய்களைப் பரப்பி, எங்களைச் சோர்வடையச் செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். சென்ற வாரம் 5,000 கோடி டாலர் மூலதன நிதியாக, பேஸ்புக் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், நிறுவனம் மூடப்படும் என்பது முட்டாள்தனமான கருத்து எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பூமியின் மீது ஒரு கிரகம் மோதி பூமி அழியப் போகிறது, ஒபாமாவின் மனைவி இன்னொரு குழந்தைக்குத் தாயாகப் போகிறார், போன்ற பல பொய்யான கற்பனை செய்திகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள சில இணைய தளங்களின் விளையாட்டு இது என்றும் கூறியுள்ளார்.
Home
»
»Unlabelled
» பேஸ்புக் குளோஸ் ஆகுதா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment