சேரனின் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை பொங்கலன்று டிவிடியாக விற்பனைக்கு வருகிறது. சினிமா டூ ஹோம் என்ற சேரனின் புதிய முயற்சி இதன் மூலம் நடைமுறைக்கு வருகிறது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழகம் முழுவதும் 5000 முகவர்களை அவர் நியமித்துள்ளார். அவர்களுக்கு கீழ் ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரிகிறார்கள். படம் வெளியாகும் அன்று ரூபாய் 50 செலுத்தி படத்தின் ஒரிஜினல் டிவிடியை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த புதிய திட்டத்தில் வாரம் ஒரு திரைப்படத்தை வெளியிடும் எண்ணம் சேரனுக்கு உள்ளது.
இதனையொட்டி கோவை, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களின் போலீஸ் உயரதிகாரிகளை சேரன் சந்தித்து, படங்களின் திருட்டு டிவிடிகள் விற்கப்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள தனது நிறுவனத்தின் முகவர்களின் பட்டியலையும் அளித்து, அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு தரவும் கேட்டுக் கொண்டார். இன்று அவர் மதுரை மாவட்டத்தின் உயரதிகாரிகளை சந்திக்கிறார். நாளை சென்னையிலுள்ள போலீஸ் அதிகாரிகளை அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment