↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அமெரிக்க டென்னிஸ் சகோதரிகளான செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் ஆகிய இருவர்களும் சகோதரிகளா? அல்லது சகோதரர்களா? என்று சந்தேகமாக உள்ளது என்ற சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய ரஷ்ய டென்னிஸ் நிர்வாகி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி அவருக்கு ஒரு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் டென்னிஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரஷ்ய டென்னிஸ் நிர்வாகி Shamil Tarpischev, 'அமெரிக்க டென்னிஸ் வீராங்கனைகளான வீனஸ் வில்லியம்ஸ், மற்றும் செரீனா வில்லியம்ஸ் சகோதரிகளை பார்க்கும்போது இவர்கள் இருவரும் உண்மையில் சகோதரிகள் தானா? அல்லது சகோதரர்களா? என்று சந்தேகமாக உள்ளது. அந்த அளவிற்கு அவர்களிடம் ஆண்தன்மை தெரிகிறது' என்று கூறினார்.
Shamil Tarpischev அவர்களின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் எந்தவித புகாரையும், கருத்தையும் தெரிவிக்கவில்லை எனினும், ரஷ்ய டென்னிஸ் நிர்வாகம், Shamil Tarpischev அவர்களுக்கு $25,000 அபராதம் விதித்ததோடு, டென்னிஸ் நிர்வாகத்தில் பணிபுரிய ஒரு ஆண்டு தடையும் விதித்தது.
தன்னுடைய தவறை புரிந்துகொண்ட Shamil Tarpischev, வீனஸ் சகோதரிகளிடம் கடிதம் மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Home
»
sports
»
sports.tamil
» வில்லியம்ஸ் சகோதரிகளின் பாலினத்தை சந்தேகப்பட்ட ரஷ்ய டென்னிஸ் அதிகாரி.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment