அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது புதிய வழக்குப் போடப் போவதாக சுப்பிரமணியம் சாமி கூறுகிறார். 12 பினாமி நிறுவனங்களை ஜெயலலிதா வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலலிதா சாமி மோதல் நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்து வருகிறது. இதில் இதுவரை ஜெயலலிதா பெரிய அளவில் வெற்றி பெற்றதில்லை.மிக முக்கியமாக சாமி பிள்ளையார் சுழி போட்டு வைத்த சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போய் விட்டார் ஜெயலலிதா.
ஜாமீனில் வெளிவருவதற்குள் பெரும்பாடு பட வேண்டியதாயிற்று. ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு சாமி மீது ஐந்து அவதூறு வழக்குகளைப் பதிவு செய்தது தமிழக அரசு. ஆனால் அதன் மீதான விசாரணைக்கு நேற்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப் போவதாக சாமி கூறுகிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட் செய்தியில், ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் போடப் போகிறேன்.
தமிழக அரசுடன் வர்த்தக் தொடர்பை மேற்கொண்டு வரும் 12 பினாமி நிறுவனங்கள் குறித்தது இது என்று அவர் கூறியுள்ளார். இது என்ன மாதிரியான கஷ்டத்தை ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப் போகிறதோ தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment