ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு சாகச வீரன் வந்துதான் தன்னை காப்பாற்றுவான் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் இளவரசிகள் பற்றிய பழைய ராணி காமிக்ஸ் கதைகள் உண்டு. இன்றைய சினிமாக்கள் அதுமாதிரியான எதிர்பார்ப்பு கொண்ட சமூகத்தையும் அவர்கள் எதிர்பார்க்கும் இளவரசன்களாக சினிமா கதாநாயகர்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அப்படியான ஒரு கதை அமைப்பில் கத்தி திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
கத்தி படம் சமூக பிரச்சனையை பேசுவதாக செய்தி பரவியது. நமது சினிமாக்காரர்களின் சமூக அறிவு எவ்வளவு நுட்பமானது என்று நமக்கு தெரியும். இருந்தாலும். அதையும் பார்த்து விடுவது என்று சென்ற போதுதான் ‘பழைய மொந்தையில் புதிய கல்’ என்று தெரிந்தது. அச்சு அசலாக எம்.ஜி.ஆர். நடித்த ‘ எங்கள் வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் தழுவல். கோழை, வீரன் என்று அங்கே இரண்டு எம்.ஜி.ஆர். இங்கே இரண்டு விஜய். இரண்டு படத்திலும் சந்தர்ப்ப வசத்தில் இருக்கும் இடம் மாறி கொள்கிறார்கள். அங்கே நம்பியார் பாத்திரத்தில் இங்கே புதிய வில்லன். இரண்டு படத்திலும், மாறிவரும் கதாநாயகன் போலி என்பது தெரிய வருகிறது. இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க, போலி நிஜத்தை காப்பாற்றிவிட்டு மறைந்து விடுகிறது. இதுதான் இரண்டுக்கும் பொதுவான கதை அம்சம்.
சுமார் 50 நிமிடங்கள் படத்தில் எந்த சமூகப் பிரச்சனையும் தலைகாட்டவில்லை. எதிர்வரும் தேர்தல்களில் வாக்காளர்களாகப் போகும் பிஞ்சுகளை குஷிபடுத்தும் விஜயின் வழக்கமான உடல் மொழி சேட்டைகளும், ஆபாசம் தெறிக்கும் குத்துப்பாடலுமாகவே படம் போகிறது. கொல்கத்தா சிறையில் இருந்து தப்பித்து வந்த விஜய் கருப்பு என்ற முருகானந்தமாக வருகிறார். 50 நிமிடங்களுக்கு பிறகு சமூக பொறுப்பு கொண்ட ஆனால் ஆளுமையும், போராடும் திறனுமற்ற புதிய விஜய் ஜீவாவாக அறிமுகமாகிறார். கம்யூனிச தோழர் பா. ஜீவானந்தத்தை நினைவு கூறும் விதமாக ஜீவானந்தம் என்ற ஜீவாவாக அறிமுகமாகிறார். அவர் ஒரு விபத்தில் சிக்க விவசாயிகளுக்காக போராடும் அவரை பன்னாட்டு நிறுவன முதலாளியின் கூலிப்படை துரத்துகிறது. ஜீவாவின் கார் விபத்துக்குளாக கூலிப்படை சுட்டு விட்டு செல்கிறது. மயக்கத்தில் இருக்கும் ஜீவாவை முருகானந்தம் மருத்துவமனையில் சேர்த்து விட்டு தனது உடைமைகளையும் ஜீவாவின் அருகில் வைத்துச் செல்கிறார். கொல்கத்தா காவல் துறை தமிழகம் வந்து உடமைகளை வைத்து முருகானந்தத்திற்கு பதில் ஜீவாவை கைது செய்கிறது. continue to read
0 comments:
Post a Comment