'என்னை அறிந்தால்...' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டப்பட்டதை அடுத்து, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் படத்தின் தலைப்பு அறிவித்தத்திற்கு திரையுலகினர் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, 'என்னை அறிந்தால்...' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதனால், ட்விட்டர் தளத்தில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் 'என்னை அறிந்தால்' தலைப்பு தொடர்ந்து முன்னிலை வகித்துள்ளது.
அஜித், அனுஷ்கா, விவேக், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை தயாரித்து வருகிறார் ஏ.எம்.ரத்னம்.
இந்தப் படத்திற்கு பெயர் வைக்காமல், முதலில் படப்பிடிப்பை முடித்துவிடலாம் என்று தீவிரம் காட்டினார்கள். தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பை எட்டியிருக்கிறார்கள்.
இந்நிலையில், "படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் போஸ்டர் டிசைன் ஆகியவை இன்று வெளியாகும்" என்று அறிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் #MakeWayForTHALA55TitleWithFL என்ற டேக் தயார் செய்து, அதில் தங்களது எதிர்ப்பார்ப்பை பகிர்ந்து வந்தார்கள்.
சரியாக இரவு 12 மணிக்கு படத்தின் தலைப்பு 'என்னை அறிந்தால்' என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியீடு எப்போது என்பதற்கு #yennaiarindhaalposterrelease என்ற டேக் தயார் செய்து ட்ரெண்ட் செய்து வந்தார்கள். பகல் 1 மணிக்கு அதிகாரப்பூர்வ போஸ்டர் டிசைன் வெளியிடப்பட்டது.
படத்தின் தலைப்பு, போஸ்டர் என ஒரே நாளில் வெளியானதால், ட்விட்டர் தளத்தில் அஜித் ரசிகர்களிடையே உற்சாகம் காணப்பட்டது. இந்தியளவில் ட்விட்டர் தளத்தில் #YennaiArindhaal என்ற டேக் முதல் இடத்தில் இருக்கிறது.
தமிழ் திரையுலகினர் பலரும் தலைப்பு மற்றும் போஸ்டர் டிசைனுக்கு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.