↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய-இலங்கை கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் மற்றும் இலங்கை மீனவர் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மா சூரசேன தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தார்.


கடலில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தங்கச்சிமடத்தை சேர்ந்த எமர்சன், வில்சன், அகஸ்டஸ், லாங்லேட், பிரசாத் ஆகிய ஐந்து மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 

இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி பத்மா சூரசேன குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இலங்கையை சேர்ந்த மூவருக்கும் தூக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், இந்த தீர்ப்பு இலங்கை இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்தும் என வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top