தமிழகத்தில் ‘எழுத்து’ என்ற பெயரில் ஒரு இலக்கிய அமைப்பு நவம்பர் 3ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. இந்த அமைப்பை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்குகிறார்.�
இந்த அமைப்பில் தமிழறிஞர் அவ்வை நடராசன், கவிஞர்கள் வைரமுத்து, மு.மேத்தா, மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் அறங்காவலர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இதன் தொடக்க விழாவிற்கு ரஜினிகாந்த் அவர்களை அழைக்க விரும்பி அவரை நேரில் சந்தித்துள்ளார் கார்த்திக் சிதம்பரம்.
�
அப்போது ரஜினிகாந்த், கார்த்திக் சிதம்பரத்திடம் அரசியல் குறித்து விரிவாக பேசியுள்ளதாக தெரிகிறது. பாஜகவில் ரஜினி சேர்வது குறித்த தகவல் குறித்து கார்த்திக் கேட்டபோது அதற்கு பதிலளித்த ரஜினி, இந்த மாதிரி வரும் நியூஸ் தன்னோட ரசிகர்களுக்குப் பல்வேறு குழப்பத்தையும் யோசனைகளையும் தூண்டிவிட்டதாகவும் ரஜினி சொல்லியிருக்கிறார்.
��
‘இந்த மாதிரி வர்ற நியூஸைப் படித்ததும் என்னோட ரசிகர்கள் எனக்கு நிறைய லெட்டர்ஸ் எழுத ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களோட எல்லா கடிதங்களையும் நான் படிச்சிட்டு வர்றேன். இதுல பெரும்பாலான கடிதங்கள், நீங்கள் பி.ஜே.பி-யில சேர வேண்டாம்னுதான் வந்திருக்கு. நீங்க அரசியலுக்கு வரணும்னு நினைச்சீங்கன்னா தனிக் கட்சி ஆரம்பியுங்க. எந்தக் கட்சியிலயும் சேர வேண்டாம் என்றுதான் நிறைய ரசிகர்கள் எழுதுறாங்க’ என்று ரஜினி கூறியிருக்கின்றார்..
‘நானும் அரசியலுக்கு வருவதாக இருந்தால் அதுதான் சரியான முடிவுன்னு நினைக்கிறேன். நான் எல்லார்க்கும் பொதுவானவன். என்னோட ரசிகர்கள் இந்துக்கள் மட்டுமில்ல. கிறிஸ்துவர்களும் இருக்காங்க. முஸ்லிம்களும் இருக்காங்க. ரசிகர் மன்ற பொறுப்புல ஏராளமான சிறுபான்மையினர் இருக்காங்க. அப்படியிருக்கும்போது நான் யோசிச்சுதான் முடிவெடுப்பேன்.�
என் ரசிகர்கள் எல்லாக் கட்சியிலயும் இருக்காங்க. தனிக் கட்சி ஆரம்பிச்சா அவங்க வருத்தப்பட மாட்டாங்க. ஆனால் வேற ஒரு கட்சியில போயி சேர்ந்தா ஏத்துப்பாங்கன்னு சொல்ல முடியாது என்று கார்த்திக் சிதம்பரத்திடம் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment