குட்டிக் குட்டி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த வெங்கட் பிரபு, அப்படியே விளையாட்டாக கிரிக்கெட்டை வைத்து இயக்கிய 'சென்னை 28' படம் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து அடுத்தடுத்து 'சரோஜா, கோவா,' என அவருடைய கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து படத்தை இயக்கினார். அதன் பின் அஜித்தை வைத்து இயக்கிய 'மங்காத்தா' படம் வெற்றியடைந்து அஜித்துக்கும் திருப்புமுனையான படமாக அமைந்தது.
'மங்காத்தா' படத்திற்கு முன்னதாக அஜித் நடித்த 'ஏகன், அசல்' இரண்டு படங்களுமே தோல்விப் படமாக அமைந்தது. வெங்கட் பிரபு, 'மங்காத்தா' படத்தில் அஜித்தைப் புதியதாக 'சால்ட் அன்ட் பெப்பர்' தோற்றத்தில் நடிக்க வைத்து அவருக்கும் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தார்.அதோ போல் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் சூர்யாவுக்கு இதற்கு முன் வெளிவந்த “அஞ்சான், மாற்றான், 7ம் அறிவு” ஆகிய படங்களும் வியாபார ரீதியாக தோல்விப் படங்களாகவே அமைந்துள்ளன. அஜித்துக்கு ஒரு திருப்பு முனையைக் கொடுத்தது போல், சூர்யாவுக்கு இப்போது வெங்கட் பிரபு 'மாஸ்' படம் மூலம் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுப்பாரா என்பதே பலரது கேள்வியாக இருந்து வருகிறது.
தீபாவளியன்று வெளியான 'மாஸ்' படத்தின் முதல் பார்வை சர்ச்சையைக் கிளப்பினாலும், அந்த போஸ்டர் டிசைன் பலரும் பயன்படுத்தும் 'மக் ஷாட்' எஃபெக்டில் டிசைன் செய்யப்பட்டதுதான் என பதிலளித்துள்ளார். இப்போதைக்கு அவர் சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளதால் 'அஞ்சான்' படத்தைப் போன்று 'மாஸ்' போஸ்டரை யாரும் பெரிதாகக் கிண்டலடிக்கவில்லை.
ஆனால், 'கத்தி' படத்தைப் பற்றி வெங்கட் பிரபுவின் தம்பியான பிரேம்ஜி அமரன் கிண்டலடித்து வருவதாலும், வெங்கட் பிரபுவே, லிங்குசாமிக்கு ஆதரவாக சில வாரங்களுக்கு முன் கருத்தை வெளியிட்டதாலும், 'மாஸ்' படம் வரும் போது விஜய் ரசிகர்கள் அவர்களை 'தெறி'க்க ஓட வைப்பார்களோ என்ற ஒரு அச்சம் சமூக வலைத்தள பயனாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment