வடிவேல் ஒருபடத்தில் புதிதாக கடைக்கு அரிசி முதல்போடுவதற்காக ஒருகடையில் போய் சாம்பிளுக்கு ஒவ்வொரு கிலோ அரிசி வாங்கி சேமிப்பார். அதேபோலவே "கத்தி" படமும் முருகதாசால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் மூலமான திரைக்கதையே இன்னொருவரிடமிருந்து சுடப்பட்டது. அதுபோக கத்தி பட டீசரின் பின்னணி இசையையும் அனிருத் எங்கையோ சுட்டுவிட்டார்.. அதுபோக படத்தின் பல சீன்களும் களவாடப்பட்டிருக்கிறது.
லேட்டஸா தற்போது ‘கத்தி’ படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய காட்சியும் காப்பி அடிக்கப்பட்டதுதான் என இணையதள அதிதீவிர பயன்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
‘கத்தி’ படத்தில் கொல்கத்தா சிறையிலிருந்து தப்பிப்பதற்காக விஜய், சிறைச்சாலையின் ‘புளூ பிரின்ட்’டை வாங்கி மேஜை மீது பரப்பி வைத்து, அதன் கீழே குனிந்து பார்க்கும் கிராபிக்ஸ் காட்சியும், அதே போல் கிளைமாக்சில் சென்னை மாநகரத்திற்கு குடிநீர் வழங்கும் குழாய்களின் புளூ பிரின்டை வைத்துப் பார்க்கும் காட்சியும் ‘காப்பி’ அடிக்கப்பட்டவையே என்கிறார்கள்.
நேஷனல் ஜியாகரபிக் சேனலில் ஒளிபரப்பான ‘பிரேக் அவுட்’ என்ற நிகழ்ச்சித் தொடரில் அப்படிப்பட்ட காட்சிகள் இருக்கின்றன. அவற்றைப் பார்த்துத்தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘கத்தி’ படத்தில் அதே மாதிரியான காட்சியை வைத்திருக்கிறார் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
இதை படித்துவிட்டு அப்பிடியே கீழே உள்ள படத்தையும் பார்த்து கிரகியுங்கள்... வடிவேலுவுக்கும் முருகதாசுக்கும் பெரிசா வித்தியாசமில்ல...
0 comments:
Post a Comment