ஷங்கர் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் "ஐ". இதில் விக்ரம்- எமிஜாக்சன் நடித்திருக்கிறார்கள்.
இதில் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் பல கெட்-அப்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் சுரேஷ் கோபி, சந்தானம், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார்.
சமீபத்தில் ‘ஐ’ படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மேலும் இதில் ரஜினிகாந்த், புனித் ராஜ்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் ‘ஐ’ படம் உருவான விதம் யூடியூப்பில் வெளியாகியுள்ளது. இதில் படம் உருவானவிதம் மற்றும் பாடல்கள் உருவானவிதம் பற்றி இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கூறியுள்ளனர்.
இதில் ஷங்கர் கூறும்போது, ‘‘இப்படத்திற்கு ஏற்ற தலைப்பு அழகன் அல்லது ஆணழகன் என்று வைப்பதாக இருந்தது. ஆனால் இந்த இரண்டு தலைப்பில் ஏற்கனவே படங்கள் வெளியாகிவிட்டது. எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு எழுத்தில் தலைப்பு வைக்க வேண்டும் என்று ஆசை. அதேபோல் ‘ஐ’ என்ற எழுத்து மேல் ஒரு ஈர்ப்பு. ஐ-க்கு தமிழில் என்ன அர்த்தம் எல்லாம் இருக்கிறது என்று தேடினோம். அப்போது ‘ஐ’ என்றால் அழகு என்று ஒரு அர்த்தம் இருந்தது. உடனே இதுதான் சரியான தலைப்பு என்று வைத்தேன்’’ என்றார்.
0 comments:
Post a Comment