‘கத்தி’ படத்தைப் பற்றி தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. முதலில் ‘கத்தி’ படத் தயாரிப்பு நிறுவனம் பற்றி எழுந்த பிரச்சனை அவர்களது பெயரை நீக்கிய பின் முடிவுக்கு வந்தது.
பட வெளியீட்டுக்கு முன்னரை விட, படம் வெளியான பின் ‘கத்தி’ படத்தின் கதை கோபி என்பவருடையது என பலத்த சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக அவரும் பேட்டி அளித்து வருகிறார்.
படத்தின் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத், வெளிநாட்டு ஆல்பம் ஒன்றிலிருந்து காப்பி அடித்தார் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
தற்போது ‘கத்தி’ படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய காட்சியும் காப்பி அடிக்கப்பட்டதுதான் என இணையதள அதிதீவிர பயன்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
‘கத்தி’ படத்தில் கொல்கத்தா சிறையிலிருந்து தப்பிப்பதற்காக விஜய், சிறைச்சாலையின் ‘புளூ பிரின்ட்’டை வாங்கி மேஜை மீது பரப்பி வைத்து, அதன் கீழே குனிந்து பார்க்கும் கிராபிக்ஸ் காட்சியும், அதே போல் கிளைமாக்சில் சென்னை மாநகரத்திற்கு குடிநீர் வழங்கும் குழாய்களின் புளூ பிரின்டை வைத்துப் பார்க்கும் காட்சியும் ‘காப்பி’ அடிக்கப்பட்டவையே என்கிறார்கள்.
நேஷனல் ஜியாகரபிக் சேனலில் ஒளிபரப்பான ‘பிரேக் அவுட்’ என்ற நிகழ்ச்சித் தொடரில் அப்படிப்பட்ட காட்சிகள் இருக்கின்றன. அவற்றைப் பார்த்துத்தான் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘கத்தி’ படத்தில் அதே மாதிரியான காட்சியை வைத்திருக்கிறார் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். Video
0 comments:
Post a Comment