↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பட வசனத்தில் தன் பெயரை பயன்படுத்த கூடாது என சோனாக்ஷிக்கு தடைபோட்டார் பிரபுதேவா. இந்தியில் பிரபு தேவா இயக்கி வரும் படம் ‘ஆக்ஷன் ஜாக்ஸன். அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா ஜோடியாக நடிக்கின்றனர். அதில் ஒரு காட்சியில் அஜய்யிடம் வசனம் பேசிய சோனாக்ஷி,‘பிரபுதேவாவைவிட நீங்கள் நன்றாக நடனம் ஆட முடியும் என்கிறார். ‘நீங்கள் இயக்கும் படத்தில் உங்கள் பெயரை வசனத்தில் சேர்த்தது ஏன்? என்று பிரபுதேவாவிடம் சிலர் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த பிரபுதேவா,‘அது என்னுடைய ஐடியா இல்லை. ஹிருத்திக் அல்லது சாஹித் கபூரை அந்த வசனத்தில் குறிப்பிடும்படி சோனாக்ஷியிடம் கூறினேன். அருகிலிருந்த அஜய் தேவ்கன்,‘மற்றவர்கள் பெயரை எதற்கு குறிப்பிட வேண்டும். அதான் நீங்களே (பிரபுதேவா) இங்கு இருக்கிறீர்களே. உங்கள் பெயரையே குறிப்பிடலாமே என்றார். அதை சோனாக்ஷியும் ஏற்றுக்கொண்டு என் பெயரை வசனத்தில் சேர்த்துவிட்டார். என் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்றுதான் நான் சொன்னேன். டிரைலரில் ஒரு ஈர்ப்பு காட்டுவதற்காக என் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கும் எண்ணம் எதுவும் எனக்கில்லை என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment