↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருப்பதாக படக்குழுவினர் கூருகின்றனர். இந்நிலையில் லிங்கா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நவம்பர் 9-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை பெற்றுள்ள ஈராஸ் நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வெளியிட்டு வந்த ஈராஸ் நிறுவனம் சமீபத்தில் தனது கிளையை தென்னிந்தியாவில் துவக்கி அதன் மேலாளராக ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தை நியமித்தது.
இவருடைய திறமையான நிர்வாகத்தால் ‘கத்தி’ படத்தின் ஆடியோ உரிமையை முதன்முதலில் பெற்று அந்த படத்தின் பாடல்களை பெரும் தடைகளுக்கு இடையே வெற்றிகரமாக ஆடியோ வெளியீட்டு விழாவை முடித்தார்.
மேலும் மகேஷ்பாபு நடித்த அகடு திரைப்படத்தின் நான்கு மாநில உரிமைகளை பெற்று அதிலும் பெரும் லாபத்தை தனது நிறுவனத்திற்காக சம்பாதித்து கொடுத்தார் செளந்தர்யா. இந்நிலையில் ‘லிங்கா’ படத்தின் ஆடியோ உரிமையையும் பெற்றுள்ள ஈராஸ் நிறுவனம், இப்படத்தின் ஆடியோவையும் மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘லிங்கா’ படத்தை ராக்லைன் வெங்கடேஷ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். அப்பாடலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
Home
»
cinema
»
cinema.tamil
»
linga
»
rajini
» நவம்பர் 9ஆம் தேதி லிங்கா பாடல் வெளியீட்டு விழா. செளந்தர்யா ரஜினிகாந்த் தீவிர ஏற்பாடு.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment