↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

விஜய், சமந்தா நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தில் வெளியான 'கத்தி' திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்று வசூல் மழை பெய்துகொண்டிருக்கும் நிலையில் கத்தி படம் குறித்து சர்ச்சைக்குரிய செய்திகளும் வெளிவந்துகொண்டேதான் இருக்கின்றது. கத்தி படத்தில் இடம்பெறும் 2ஜி வசனம் குறித்து மதுரை நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த படம் குறித்து இன்னொரு அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

கத்தி படம் ரிலீஸாவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் திடீரென தமிழ் அமைப்புகள் என்ற போர்வையில் சிலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பின் காரணமாக படம் வெளியாகுமா? என கடைசி வரை சஸ்பென்ஸாக இருந்தது. தீபாவளிக்கு முந்தைய நாள் கூட சத்யம் தியேட்டர் தாக்கப்பட்டதால், படம் வெளியாவது சந்தேகம் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

ஆனால் கடைசி சில மணி நேரங்களில் திடீர் திருப்பம் ஏற்பட்டு லைகா நிறுவனம் தன்னுடைய லோகாவை நீக்குவதாக ஒப்புக்கொண்டதாகவும், அதனால் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை நீங்கியது என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் ஒரு புலனாய்வு பத்திரிகை ஒன்று கத்தி படம் குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கத்தி படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை அனைத்துமே ஒரு நாடகம் என்றும், ரசிகர்களிடமும் ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்தால் படக்குழுவினரே ஆள் வைத்து பிரச்சனைகளை செட்டப் செய்ததாகவும் கூறப்படுகிறது.

கடைசி நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஒருசில தலைவர்களிடம் முதலிலேயே பேசி அவர்களை சமாதானப்படுத்திவிட்டதாகவும், ஆனால் ஊடகங்களில் இலவச விளம்பரம் பெற வேண்டி கடைசி வரை இந்த பிரச்சனை இழுபறியாக இருப்பதுபோல் நாடகம் ஆடியதாகவும் அந்த புலனாய்வு பத்திரிகை கருத்து வெளியிட்டுள்ளது.

ஆனால் விஜய் போன்ற மாஸ் நடிகரும், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற ஒரு திறமையான இயக்குனரும் இதுபோன்ற சீப்பான விளம்பரத்தை என்றுமே விரும்பியதில்லை என்று கோலிவுட்டில் உள்ள முக்கியஸ்தர்கள் இந்த செய்தியை மறுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top