↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
"மெயின் ஹூன் ரஜினிகாந்த்' படத்தின் தலைப்பை மாற்றி விடுகிறோம்," என பாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த வர்ஷா என்கிற திரைப்பட தயாரிப்பு நிறுவனம், "மெயின் ஹூன் ரஜினிகாந்த்' என்ற பெயரில் ஒரு ஹிந்தி திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் தோற்றத்தை பிரதிபலிக்கும் விதமாக கதாபாத்திரம் அமைந்துள்ளது. அதில், ரஜினியைப் போன்று வசனம் பேசுதல், நடை உடை பாவனை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து, இந்தப் படத்தை வெளியிடத் தடை கோரி நடிகர் ரஜினிகாந்த் வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவில், ஒழுங்கீனமற்ற முறையில் அந்த கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய சினிமா துறையில் எனக்கு உள்ள மரியாதை, நற்பெயர் அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில், எனது பெயரை வைத்து முற்றிலும் முரணாக ஒரு படத்தை வர்ஷா நிறுவனம் தயாரித்துள்ளது. அதனால், மெயின் ஹூன் ரஜினிகாந்த் என்ற பெயரில் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.
இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்றம் "மெயின் ஹூன் ரஜினிகாந்த்' என்ற பெயரில் படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வர்ஷா தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ரஜினிகாந்தின் பெயர், தோற்றம், வசன உச்சரிப்பு போன்றவைகளைப் பயன்படுத்த மாட்டோம் எனவும், "மெயின் ஹூன் ரஜினிகாந்த்' என்ற படத்தின் தலைப்பை மாற்றி நீக்கி விடுகிறோம் எனவும் தயாரிப்பு நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
இந்த உத்தரவாதம் பதிவு செய்யப்படுகிறது. தலைப்பை மாற்றுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் 10 நாள்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். மேலும், ரஜினிகாந்த், அவரது குடும்பத்தினர் தொடர்பாக இடம்பெற்றுள்ள காட்சிகளையும் நீக்க வேண்டும் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதால் வழக்கை முடித்து வைக்கிறோம்."
Home
»
cinema
»
cinema.tamil
»
rajini
» வழக்கில் வென்றார் ரஜினி... இந்திப் படத்தின் பெயரை மாற்ற தயாரிப்பாளர் உறுதி!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment